கும்ப ராசியின் ஆட்சிக்குள் வரும் மலர்களும் தாவரங்களும்:
• ஆர்க்கிட்ஸ்
• கோல்டன் ரெயின்
• கோல்டன்ராட்
• ஜாக்-இன்-தி-பல்பிட்ஸ்
• பரடைய்ஸ் பறவை மலர்கள்
• கிளாடியோலஸ் ட்ரில்லியம்
மரங்கள்
• கிவி
• ஆல்டர்
ராசிகளின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க ஏற்ற மலர்கள்:
பிப்ரவரி (கும்பம்) - வயலட், பிரிம்ரோஸ்
கும்பம் - அமரில்லிஸ்
கும்ப ராசியினர் தாங்கள் கூட்டத்திலிருந்து வேறுபட்டவர்கள் என்றும், அவர்களின் செயல்கள் சாதாரணத்திற்கு மாறானவை என்றும் எண்ணுவர். அதனால் அவர்களுக்கு மிகவும் பொருத்தமான மலர் அமரில்லிஸ்; மலர்களில் தனித்துவமான ஒன்றாக இது விளங்குகிறது. மற்ற மலர்ச்செடிகளுக்கு மாறாக இது வேறு பருவத்தில் மலர்கிறது. வெள்ளை நிறத்திலும் சிவந்த நரம்போட்ட கோடுகளுடனும் காணப்படும் இந்த மலர் “நேகட் லேடி” என்றும் அழைக்கப்படுகிறது. கும்ப ராசியின் தனித்துவமான பண்பை பிரதிபலிக்கும் மலராக இது கருதப்படுகிறது.
மலர்கள் நம்மை மகிழ்விக்கும் அருமையானவை
அன்பையும் பாசத்தையும் காட்ட பிறருக்கு பரிசளிக்கப்படுகின்றன. எந்த
நிகழ்ச்சியாக இருந்தாலும், மலர்கள் நம் வாழ்க்கையின் மகிழ்ச்சி தரும்
ஒரு பகுதியாகும். அவை பார்ப்பதற்கே அழகானவை. பல வடிவம்,
அளவு, நிறம் மற்றும் மணம் கொண்ட பலவகை மலர்கள் உள்ளன.
அப்படியானால் உங்களுக்கோ பிறருக்கோ மலரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
ஒவ்வொரு ராசிக்கும் அதனுடன் ஒத்திசைவூட்டும் குறிப்பிட்ட மலர்கள்
ஒதுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசியின் அடிப்படையில் எந்த மலர்
உங்களுக்கு சிறந்தது என்பதை அறியுங்கள்...

